ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: விராட் கோலிக்குப் பதிலாக ஜெய்ஸ்வால்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி விளையாடமாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: விராட் கோலிக்குப் பதிலாக ஜெய்ஸ்வால்
Published on

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதில் விராட் கோலி இடம் பிடித்திருந்தார்.

இந்த நிலையில் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடும்போது, விராட் கோலிக்கு தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு (hamstring) காயம் ஏற்பட்டுள்ளது. காயம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே ஆகிறது. இதனால் அவர் ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர் மீண்டும் அணிக்கு எப்போது திரும்புவார் என்பது தெரியவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும், விராட் கோலிக்குப் பதிலாக ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் போட்டி வருகிற 13-ந்தேதியும், 2-வது போட்டி 17-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 20-ந்தேதியும் நடைபெற இருக்கிறது. கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com