வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி: பாண்ட்யா ஆட்டநாயகன் விருதை வென்றார்

இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.அதிரடியாக ஆடிய பாண்ட்யா 27 பந்தில் அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி: பாண்ட்யா ஆட்டநாயகன் விருதை வென்றார்
Published on

ஆன்டிகுவா:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று நடந்து வருகிறது.

ஆன்டிகுவாவில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ரோகித் சர்மா, விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

ரோகித் 23 ரன்னிலும், விராட் கோலி 37 ரன்னிலும், ரிஷப் பண்ட் 36 ரன்னிலும் அவுட்டாகினர். சூர்யகுமார் யாதவ் 6 ரன்னும், ஷிவம் துபே 34 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய பாண்ட்யா 27 பந்தில் அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சினால் தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிகபட்சமாக வங்காளதேச கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ 40 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் அர்ஷிதீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசி ஒரு விக்கெட்டும் வீழ்த்திய ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

X

Maalai Malar
www.maalaimalar.com