இலங்கையை ஒயிட்வாஷ் செய்த இந்தியா.. 5வது T20 போட்டியிலும் பெண்கள் அணி அபார வெற்றி

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.கேப்டன் சமாரி அட்டப்பட்டு (2), நிலக்ஷிகா சில்வா (3), கவிஷா தில்ஹாரி (3) என முக்கிய வீராங்கனைகள் சொதப்பினர்.
இலங்கையை ஒயிட்வாஷ் செய்த இந்தியா.. 5வது  T20 போட்டியிலும் பெண்கள் அணி அபார வெற்றி
Published on

இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 4-0 என கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் அவுட்டாகினர். 77 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி தத்தளித்தது.

கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்தார். அவர் 43 பந்தில் 68 ரன்கள் குவித்தார். அமன்ஜோத் கவுர் 21 ரன்கள் எடுத்தார்.

கடைசி கட்டத்தில் அருந்ததி ரெட்டி அதிரடியில் மிரட்டி 11 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.

இலங்கை சார்பில் சமாரி கவிஷா திஹாரி, ராஷ்மிகா, சமாரி அட்டபட்டு ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

இலங்கை வீராங்கனை ஹசினி பெரேரா அதிகபட்சமாக 42 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இமேஷா துலானி 39 பந்தில் அரை சதம் அடித்து அவுட் ஆனார்.

ஹாசினி பெரேரா 42 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 65 ரன்கள் எடுத்தனர்.

கேப்டன் சமாரி அட்டப்பட்டு (2), நிலக்ஷிகா சில்வா (3), கவிஷா தில்ஹாரி (3) என முக்கிய வீராங்கனைகள் சொதப்பினர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் 5 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை ஒயிட்வாஷ் செய்துள்ளது.  

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com