

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டி காலே மைதானத்தில் நடக்கிறது. அதன்பின் 23-ந்தேதி 2-வது டெஸ்ட் கொழும்பு (எஸ்.எஸ்.சி.) மைதானத்தில் தொடங்குகிறது.
இதற்கிடையே இந்திய அணி வருகிற 7-ந்தேதி இலங்கை லெவன் அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் இந்திய விளையாட இருக்கிறது. முதலில் இது 4 நாட்கள் ஆட்டமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, இது மூன்று நாட்கள் ஆட்டமாக குறைக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணியில் சரான்ஷ் ஜெயின் என்ற புதிய வீரர் இடம் பிடித்துள்ளார். 33 வயதாக இவர் இடது கைது பேட்ஸ்மேன் ஆவார். வலது கை சுழற்பந்து வீச்சாளர் ஆவார். மேலும், மானவ் சுதர் என்ற இது கை சுழற்பந்து வீச்சாளரும் இடம் பிடித்துள்ளார்.
1. சுப்மன் கில் (கேப்டன்), 2. கே.எல். ராகுல் (துணைக் கேப்டன்), 3. ஜெய்ஸ்வால், 4. துருவ் ஜுரெல், 5. தேவ்தத் படிக்கல், 6. ரிஷப் பண்ட், 7. சாய் சுதர்சன், 8. ஜடேஜா, 9. சரான்ஷ் ஜெயின், 10, மானவ் சுதர், 11. பும்ரா, 12. குர்னூர் பிரார், 13, குல்தீப் யாதவ், 14, முகமது சிராஜ், 15. பிரசித் கிருஷ்ணா.