இளம் வீரர்கள் கோலியின் மனநிலையைப் பின்பற்ற வேண்டும்: கவாஸ்கர்

சில வீரர்கள் தங்களைப் பற்றிய எதிர்பார்ப்புகளுக்காக விளையாடுவார்கள்.கோலி ரன்களைக் குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.
இளம் வீரர்கள் கோலியின் மனநிலையைப் பின்பற்ற வேண்டும்: கவாஸ்கர்
Published on

இந்தியா - நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் ஒரு முறை வென்று தொடரில் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இளம் வீரர்கள் கோலியின் மனநிலையைப் பின்பற்ற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டின் கோட். 52 ஒருநாள் சதங்களை எட்டிய அவரது சாதனை, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்ததுடன் அவரை ஒரு தனி உயரத்தில் வைத்துள்ளது.

கோலி எந்த ஒரு குறிப்பிட்ட "இமேஜுக்கும்" (Image) கட்டுப்படாமல், ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதே அவரது வெற்றிக்கான ரகசியம். சில வீரர்கள் தங்களைப் பற்றிய எதிர்பார்ப்புகளுக்காக விளையாடுவார்கள், ஆனால் கோலி ரன்களைக் குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.

இளம் வீரர்கள் கோலியின் மன உறுதி மற்றும் ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விதத்தைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தோல்வியின் விளிம்பில் இருந்தபோதும் விட்டுக்கொடுக்காமல் போராடும் அவரது குணம் பாராட்டுக்குரியது.

என கவாஸ்கர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com