சண்டிகர் டெஸ்ட்: இரண்டாம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 475/6

இந்திய அணியில் கே.எல்.ராகுல், சுப்மன் கில் சதமடித்து அசத்தினர்.
gill, pant
Published on

இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நியூ சண்டிகரில் முல்லன்பூர் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மானவ் சுதார் அறிமுகம் ஆனார்.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல், கேப்டன் சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்தனர். ரிஷப் பண்ட் அரை சதம் கடந்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 368 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 103 ரன்னும், ரிஷப் பண்ட் 50 ரன்னும் எடுத்திருந்தனர்.

இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆரம்பம் முதலே இந்திய அணி அதிரடியாக ஆடியது. 126 ரன்கள் எடுத்த நிலையில் சுப்மன் கில் அவுட்டானார். அடுத்து இறங்கிய துருவ் ஜுரல் 19 ரன்னில் வெளியேறினார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், ரிஷப் பண்ட் 81 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இரண்டாம் நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 475 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. வாஷிங்டன் சுந்தர் 14 ரன்னும், மானவ் சுதார் 9 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் சார்பில் முகமது சலீம் சபி 4 விக்கெட்டும், ஜியாவுர் ரகுமான்ஷரிபி, ஹஷ்மதுல்லா ஷாஹிடி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com