Prize Money | பி.சி.சி.ஐ. அறிவித்த ரூ. 131 கோடி - வீரர்களுக்கும், பணியாளர்களுக்கும் எவ்வளவு தெரியுமா?

உலகக் கோப்பை ெவன்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்தன. பி.சி.சி.ஐ. சார்பில் இந்திய அணிக்கு ரூ. 131 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது.
Prize Money | பி.சி.சி.ஐ. அறிவித்த ரூ. 131 கோடி - வீரர்களுக்கும், பணியாளர்களுக்கும் எவ்வளவு தெரியுமா?
Published on

டி20 உலகக் கோப்பையை இந்திய அணி மூன்றாவது முறையாக வென்று சாதனை படைத்தது. உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. சார்பில் இந்திய அணிக்கு ரூ. 131 கோடி பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 2024-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ. ரூ. 125 கோடி பரிசுத் தொகை வழங்கியது. தற்போது இந்த அறிவிப்பின் மூலம் அதிக பரிசுத்தொகை வழங்கியதில் தனது சாதனையை பி.சி.சி.ஐ. முறியடித்தது. 2026 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ. 131 கோடி பரிசுத் தொகை கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான வீரர்கள், பயிற்சியாளர்கள் குழு மற்றும் பணியாளர்கள் குழுவினருக்கு பிரித்து வழங்கப்பட உள்ளது.

இது குறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள ரூ. 131 கோடி பரிசுத் தொகையில் பெரும் பங்கு வீரர்களுக்கும், இதர தொகை பயிற்சியாளர் மற்றும் பணியாளர் குழுவில் இடம்பெற்று இருப்பவர்களுக்கு அவரவர் பணி மூப்பு அடிப்படையில் பிரித்து வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு தொகை சென்றடையும் என்பது குறித்து பி.சி.சி.ஐ. சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 உலகக் கோப்பையை தக்க வைத்துக் கொண்ட முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது. மேலும், தொடரை நடத்திய நாடுகளில் முதல் தடவையாக கோப்பையை வென்ற நாடு என்ற சாதனையையும் இந்தியா படைத்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com