குல்தீப் யாதவ் எனக்கு பந்து வீசமாட்டார்: தென் ஆப்பிரிக்கா வீரர் ஆதங்கம்

நேற்று நடந்த 2-வது அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தியது.இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 ஓவர் வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார்.
குல்தீப் யாதவ் எனக்கு பந்து வீசமாட்டார்: தென் ஆப்பிரிக்கா வீரர் ஆதங்கம்
Published on

பார்படாஸ்:

டி20 உலகக் கோப்பை 2வது அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 ஓவர் வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

இந்நிலையில், கிரேடு கிரிக்கெட்டர் போட்காஸ்டில் பங்கேற்ற தென் ஆப்பிரிக்காவின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இந்திய அணியின் குல்தீப் யாதவ் பந்துவீச்சுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அப்போது, கடந்த மாதம் தான் வெளியிட்ட பதிவை நினைவுபடுத்தினார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சி அமர்வுகளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் எனக்கு பந்து வீசமாட்டார்.

2024 டி20 உலகக் கோப்பைக்கு முன் குல்தீப் பந்துவீசாமல் இருப்பது சுழற்பந்து வீச்சாளரின் கவனமான முடிவு.

டெல்லி அணியுடனான பயிற்சி வலைகளில் குல்தீப்பை எதிர்கொள்ள ஆர்வமாக இருந்தேன்.

உலகக் கோப்பைக்கான எனது சொந்தத் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com