சிஎஸ்கே அணி ஏலம் எடுத்த பந்து வீச்சாளர் ஓவரில் 4 சிக்சர் பறக்க விட்ட ஹர்திக்- வைரலாகும் வீடியோ

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் நேற்றைய ஆட்டத்தில் தமிழ்நாடு- பரோடா அணிகள் மோதின.இதில் பரோடா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
சிஎஸ்கே அணி ஏலம் எடுத்த பந்து வீச்சாளர் ஓவரில் 4 சிக்சர் பறக்க விட்ட ஹர்திக்- வைரலாகும் வீடியோ
Published on

சையத் முஷ்டாக் அலி கோப்பை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஷாருக்கான் தலைமையிலான தமிழ்நாடு அணியும் குர்ணால் பாண்ட்யா தலைமையிலான பரோடா அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற பரோடா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய தமிழ்நாடு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெகதீசன் 57 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து களமிறங்கிய பரோடா அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. 222 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 30 பந்தில் 69 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் தமிழக அணிக்காக விளையாடிய குர்ஜப்னீத் சிங்கை சமீபத்தில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.2.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இந்த போட்டியில் குர்ஜப்னீத் சிங் ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 4 சிக்சர் 1 பவுண்டரி விளாசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிஎஸ்கே பந்து வீச்சாளர் ஓவரை பறக்க விட்ட மும்பை கேப்டன் என சமூக வலைதளங்களில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்த போது ஹர்திக் பாண்ட்யா ஓவரில் ஏலம் எடுக்கப்பட்ட சிஎஸ்கே வீரர் விஜய் ஷங்கர் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார் என பதிலடி கொடுத்து வருகின்றனர். ஐபிஎல் தொடங்க இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் மும்பை - சிஎஸ்கே என்ற போட்டி ஆரம்பித்து விட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com