பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஐ.சி.சி.க்கு கவாஸ்கர் வலியுறுத்தல்

நீங்கள் முன்னதாகவே விலகினால் அது முற்றிலும் வேறுபட்டது. இதில் பல்வேறு நாட்டு வாரியங்களும் சம்பந்தப்பட்டுள்ளன, எனவே இது ஒரு தனிநபரின் முடிவாக மட்டும் இருக்காது.
பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஐ.சி.சி.க்கு கவாஸ்கர் வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி:

20 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மறுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கடைசி நேரத்தில் நீங்கள் (பாகிஸ்தான்) விலகினால், அது ஒரு பிரச்சினை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் முன்னதாகவே விலகினால் அது முற்றிலும் வேறுபட்டது.

போட்டியின் கடைசி நேரத்தில் விலகினால், நிச்சயமாக ஐ.சி.சி. தலையிட்டு சில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் இதில் பல்வேறு நாட்டு வாரியங்களும் சம்பந்தப்பட்டுள்ளன, எனவே இது ஒரு தனிநபரின் முடிவாக மட்டும் இருக்காது.

ஐ.சி.சி. எடுக்கும் நடவடிக்கை எதிர்காலத்தில் வேறு எந்த அணியும் இதுபோன்று செய்யத் துணியாத வகையில் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இல்லையெனில் அரசியல் காரணங்களுக்காக விளையாட்டைப் புறக்கணிப்பது வாடிக்கையாகி விடும்.

இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com