கடந்த மெகா ஏலத்திலும் சிஎஸ்கே என்னைத் தக்கவைக்கவில்லை- தீபக் சாஹர்

இந்த ஆண்டு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. என் திறமைக்கு இப்போது அதிக மதிப்பு இருக்கும் என்று தெரியும்.
கடந்த மெகா ஏலத்திலும் சிஎஸ்கே என்னைத் தக்கவைக்கவில்லை- தீபக் சாஹர்
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களை தக்க வைத்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மதிஷா பதிரானா மற்றும் டோனி ஆகிய ஐந்து வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த மெகா ஏலத்திலும் அவர்கள் என்னைத் தக்கவைக்கவில்லை என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே என்னை ஏலம் எடுக்கும் என்று நான் நம்புகிறேன். கடந்த மெகா ஏலத்திலும் அவர்கள் என்னைத் தக்கவைக்கவில்லை. ஆனால் பல முயற்சிகளை செய்து என்னைத் திரும்ப வாங்கினர். இந்த ஆண்டு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் திறமைக்கு இப்போது அதிக மதிப்பு இருக்கும் என்று தெரியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com