ருதுராஜை தொடர்ந்து திருமண பந்தத்தில் இணைந்த மற்றொரு சிஎஸ்கே வீரர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ருதுராஜ் கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.இவரை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஜூன் 8-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
ருதுராஜை தொடர்ந்து திருமண பந்தத்தில் இணைந்த மற்றொரு சிஎஸ்கே வீரர்
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ருதுராஜ் கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இவரை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஜூன் 8-ம் தேதி நீண்ட நாள் காதலியான ரச்சனா கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இந்த இரண்டு ஐபிஎல் இளம் வீரர்களை தொடர்ந்து தற்போது சிஎஸ்கே அணியின் நட்சத்திர பவுலரான துஷார் தேஷ்பாண்டேவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தனது பள்ளி தோழி நாபா கட்டம்வார் என்பவரை கரம் பிடித்து இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளார். இவர்களது திருமணம் மும்பையில் ஜூன் 12-ம் தேதி நடைபெற்றுள்ளது.

திருமண நிகழ்வின் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த தேஷ்பாண்டே, "எனது பள்ளி கால க்ரஷாக இருந்தவர் வருங்கால மனைவியாக புரொமோட் ஆகியுள்ளார்" என குறிப்பிட்டிருந்தார். இவரது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

28 வயதாகும் துஷார் தேஷ்பாண்டே ஐபிஎல் 2022 சீசனில் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணியினரால் வாங்கப்பட்டார். அந்த சீசனில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

இதைத்தொடர்ந்து நடந்து முடிந்த ஐபிஎல் 2023 சீசனில் சிஎஸ்கே அணியின் முக்கிய பவுலராக ஜொலித்த தேஷ்பாண்டே அனைத்து போட்டிகளிலும் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் சிஎஸ்கே அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக இருந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com