ஐ.பி.எல். போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறும் விவகாரத்தில் தலையிடமாட்டோம்: பி.சி.சி.ஐ.

காயம் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் சில போட்டிகளில் விளையாடமல் இருப்பது விவகாரத்தில் பிசிசிஐ தலையிட வேண்டும் என்று ஐ.பி.எல். அணிகள் விரும்பின.
ஐ.பி.எல். போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறும் விவகாரத்தில் தலையிடமாட்டோம்: பி.சி.சி.ஐ.
Published on

ஐ.பி.எல். போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் மிகப்பெரிய அளவில் விளையாடி வருகின்றனர். ஆடும் லெவனில் 4 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெறலாம். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை பிரான்சைஸ் (ஐபிஎல் அணிகள்) மிகப்பெரிய தொகை கொடுத்து ஏலம் எடுக்கிறது.

பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க்

ஐபிஎல் போட்டி தொடங்கும்போது திடீரென தங்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்று கூறி சில போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து விடுகின்றனர். ஏலத்தில் எடுத்த பிறகு காயம் தவிர்த்து மற்ற காரணங்களால் விலகினால் பிசிசிஐ அந்த வீரர்களுக்கு இரண்டு ஆண்டுகள் விளையாட தடைவிதித்துள்ளது. ஆனால் ஒன்றிரண்டு போட்டிகளில் விளையாடவில்லை என்றால் நடவடிக்கை இல்லை.

இந்த சீசனில் பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் போன்றோர் பாதி போட்டிகளில் அதாவது முதல் ஏழு போட்டிகளில் விளையாடவில்லை. மிட்செல் ஸ்டார்க் விளையாடாதது டெல்லி அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

சாம் கர்ரன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சாம் கர்ரன் இடம்பிடித்திருந்தார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அணியில் இருந்து காயம் காரணமாக விலகினார். ஆனால், இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 தொடரில் விளையாடினார். இது தொடர்பாக ராஜஸ்தான் அணியின் சங்கக்ககரா வெளிப்படையாக தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான் இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலையிட வேண்டும் என்று பிரான்சைஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இது வெளிநாட்டு வீரர்களுக்கும் அணிகளுக்கும் இடையிலான விவகாரம். இதில் தலையிடுவதற்கான திட்டம் இல்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com