மத்திய ஒப்பந்த பட்டியல் A+ பிரிவில் விராட், ரோகித்: மீண்டும் இடம் பிடித்த ஷ்ரேயாஸ், இஷான் கிஷன்

பிசிசிஐ-ன் A+ பிரிவில் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ஜடேஜா இடம் பிடித்துள்ளனர். B பிரிவில் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றனர்
மத்திய ஒப்பந்த பட்டியல் A+ பிரிவில் விராட், ரோகித்: மீண்டும் இடம் பிடித்த ஷ்ரேயாஸ், இஷான் கிஷன்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.

2024 அக்டோபர் 1, முதல் 2025 செப்டம்பர் 30, வரையிலான இந்த வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் 34 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பிசிசிஐ-ன் வருடாந்திர ஒப்பந்தத்தில் A+ பிரிவில் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ஜடேஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

A பிரிவில் சிராஜ், கே.எல்.ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ரிஷப் பண்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

B பிரிவில் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றனர்

C பிரிவில் ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ், ஷிவம் துபே, பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன்,அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, படிதார் , சர்பராஸ் கான், துருவ் ஜூரல், நிதிஷ்குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷத் ராணா ஆகிய 19 பேர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் மீண்டும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, அபிஷேக் சர்மா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் முதல் முறையாக ஒப்பந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A+ பட்டியலில் உள்ள வீரர்களுக்கு ரூ.7 கோடியும், A பட்டியலில் உள்ள வீரர்களுக்கு ரூ.5 கோடியும், B உள்ள வீரர்களுக்கு ரூ.3 கோடியும், C உள்ள வீரர்களுக்கு ரூ.1 கோடியும் சம்பளமாக வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com