சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர்

இந்தியா -வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நாளை நடக்கிறது. இந்த டி20 தொடரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து மஹ்முதுல்லா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர்
Published on

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து 3 போட்டி கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதன் முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி டெல்லியில் நாளை ( 9-ந் தேதி) நடக்கிறது.

இந்நிலையில் இந்த தொடருடன் வங்கதேச அணியின் ஆல் ரவுண்டர் மஹ்முதுல்லா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com