டிஎன்பிஎல்: திருச்சி அணியை 105 ரன்களில் சுருட்டியது மதுரை பாந்தர்ஸ்

திருச்சி அணியில் அதிகபட்சமாக மணிபாரதி 48 ரன்கள் சேர்த்தார்.மதுரை அணி தரப்பில் சரவணன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டிஎன்பிஎல்: திருச்சி அணியை 105 ரன்களில் சுருட்டியது மதுரை பாந்தர்ஸ்
Published on

சேலம்:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பால்சி திருச்சி, சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் ஆடிய திருச்சி அணி 18.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மணிபாரதி 48 ரன்கள் சேர்த்தார்.

பிரான்சிஸ் 18 ரன்கள், டேரில் பெராரியோ 21 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீர்ர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். மதுரை அணி தரப்பில் சரவணன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குர்ஜப்னீத் சிங், அஜய் கிருஷ்ணா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்கியது.

X

Maalai Malar
www.maalaimalar.com