பிளேஆஃப் போட்டிகளில் அசத்திய ஆவேஷ் கான்

ஆர்சிபி அணிக்கெதிராக 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 27 ரன்கள் விட்டுக்கொடுதது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பிளேஆஃப் போட்டிகளில் அசத்திய ஆவேஷ் கான்
Published on

ஐபிஎல் 2024 கிரிக்கெட் சீசனின் பிளேஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் குஜராத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணியால் 172 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதற்கு ஆவேஷ் கானின் பந்து வீச்சும் முக்கிய காரணம். அவர் 4 ஓவரில் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். ரஜத் படிதார் (34), லோம்ரோர் (32), தினேஷ் கார்த்திக் (11) ஆகியோரை வீழ்த்தினார்.

அதேபோல் இன்று சென்னையில் நடைபெற்று வரும் குவாலிபையர்-2 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராகவும் பந்து வீச்சில் அசத்தினார். இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

நிதிஷ் ரெட்டி (5), அப்துல் சமாத் (0), ஷபாஸ் அகமது (18) ஆகியோரை வெளியேற்றி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் ஸ்கோரை 175 ரன்னில் கட்டுப்படுத்த முக்கிய காரணமாக இருந்தார்.

முக்கியமான இரண்டு போட்டிகளில் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com