சாம்பியன்ஸ் டிராபி: ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 351 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 356 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ் டிராபி: ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி
Published on

லாகூர்:

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய பென் டக்கெட்சதமடித்து அசத்தினார். அவர் 165 ரன்களில் அவுட் ஆனார். ஜோ ரூட் அரை சதம் கடந்து 68 ரன்னில் அவுட் ஆனார்.

ஆஸ்திரேலியா சார்பில் பென் துவார்ஷியஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் அரை சதம் கடந்து 63 ரன்னில் அவுட்டானார். அலெக்ஸ் கேரி 69 ரன்னில் வெளியேரினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் லபுசேன்47 ரன்னில் வெளியேறினார்.

ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக ஆடி சதம் கடந்து அசத்தினார். இறுதிவரை நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், ஆஸ்திரேலியா அணி 47.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜோஷ் இங்கிலிஸ் 120 ரன்னும், மேக்ஸ்வெல் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com