இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சராக அப்போலோ டயர்ஸ் தேர்வு

DREAM11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.போட்டி ஒன்றுக்கு ரூ.4.5 கோடி வீதம் அப்போலோ டயர்ஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சராக அப்போலோ டயர்ஸ் தேர்வு
Published on

சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளதால் DREAM11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் BCCI உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது எனவும் கூறினார். இதனால் ஆசிய கோப்பை தொடரின் போது ஸ்பான்சர் இல்லாத ஜெர்சியுடன் இந்திய அணி களமிறங்கியது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக அப்போலோ டயர்ஸ் நிறுவனம் தேர்வாகி உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.579 கோடிக்கு அப்போலோ டயர்ஸ் உரிமையை பெற்றுள்ளது.

போட்டி ஒன்றுக்கு ரூ.4.5 கோடி வீதம் அப்போலோ டயர்ஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com