சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரஹானே!

'அஜிங்க்யா' என்றால் 'வெல்ல முடியாதவன்' என்று பொருள்.
ரஹானே
ரஹானே
Published on

இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஜிங்க்யா ரஹானே, சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வீடியோ

தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது, ஒவ்வொன்றுக்கும் ஒரு தொடக்கமும் முடிவும் உண்டு என்பதே வாழ்வின் நிதர்சனம்.

பேட்டிங்கில் எப்படி சரியான டைமிங் இருப்பதை நம்புகிறேனோ, இன்று சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் விலகுவதற்கு இதுவே சரியான டைமிங் என உணர்கிறேன்.

கேப் எண் 278 (ரஹானேவின் தொப்பி எண்), இத்துடன் விடைபெறுகிறது.

இத்தனை ஆண்டுகளாக நீங்கள் அளித்த அன்பு, நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள்.

'அஜிங்க்யா' என்றால் 'வெல்ல முடியாதவன்' என்று பொருள், ஆனால் கிரிக்கெட் எனக்கு பல தோல்விகளைக் கற்றுக்கொடுத்திருக்கிறது.

நாம் வெற்றியை விட பெறுவதை விட தோல்விகளையே அதிகம் சந்திக்கிறோம். இருப்பினும், ரசிகர்களின் இதயங்களில் நான் ஒருபோதும் தோற்றதில்லை." என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ரஹானே டிராக் ரெக்கார்ட்

ரஹானே இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவங்களிலும் சேர்த்து 35.95 சராசரியில் 8,414 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 15 சதங்களும் 51 அரை சதங்களும் அடங்கும்.

டெஸ்ட்

இவற்றில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 85 போட்டிகளில் விளையாடி 5,077 ரன்கள் குவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில், அவர் ஆறு போட்டிகளில் இந்தியாவை கேப்டனாக வழிநடத்தினார்.

அவற்றில் நான்கு போட்டிகளில் அணி வெற்றி பெற்றது மற்றும் இரண்டு போட்டிகள் சமனில் முடிந்தன. அவர் தலைமை தாங்கிய ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வி அடையவில்லை.

ஒருநாள் போட்டி

ஒருநாள் போட்டிகளில் 90 போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே 2,962 ரன்கள் குவித்துள்ளார்.

இதில் ரஹானே மூன்று போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அவை அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

டி20

டி20 சர்வதேச போட்டிகளில் 20 போட்டிகளில் விளையாடி 375 ரன்கள் குவித்துள்ளார். அதேநேரம் அவற்றில் இரண்டு போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். அவற்றில் ஒன்றில் இந்தியா வெற்றி பெற்றது மற்றும் ஒன்றில் தோல்வியடைந்தது.

மேலும் 2008 முதல் தனது ஐபிஎல் பயணத்தில் 212 ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 5,367 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 சதங்கள், 35 அரைசதங்கள் அடங்கும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com