

இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே ஜூலை.30ம் தேதியன்று, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இந்தியாவிற்காக மூன்று வடிவங்களிலும் பல போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானேவின் இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும் ஐபிஎல்லில் அவர் விளையாடுவார் என்பது ஒரு ஆறுதலே.
இந்நிலையில் ரஹானேவின் ஓய்வூதியம் தொடர்பான செய்திகள் இணையத்தில் உலா வருகின்றன. அதாவது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜிங்க்யா ரஹானேவுக்கு, பிசிசிஐ மாதந்தோறும் ரூ.70,000 ஓய்வூதியம் வழங்கவுள்ளது.
பிசிசிஐ-யின் விதிகளின்படி, சர்வதேச அளவில் 25 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மிக உயர்ந்த பிரிவின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ரஹானே 85 டெஸ்ட் போட்டிகள், 90 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளதால் இந்த ஓய்வூதியத்தைப் பெற தகுதி பெற்றுள்ளார்.
இருப்பினும் ரஹானே பிசிசிஐயின் ஏதேனும் பொறுப்பில் பணியமர்த்தப்படாத நிலையிலேயே இந்த ஊதியம் வழங்கப்படும். அப்படி பிசிசிஐயில் ஏதேனும் பதவிப் பெற்றால் இந்த ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
அந்தப் பதவிக்காலம் முடிந்தவுடன் மீண்டும் ஓய்வூதியம் தொடரும். ஆனால் ஊடக வர்ணனை போன்றவற்றுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் ஓய்வூதியத் தொகையை பிசிசிஐ மாற்றியமைத்தது. இதற்கு முன் ரூ.50,000 ஆக இருந்த இந்த உயர் பிரிவு ஓய்வூதியம், தற்போது ரூ.70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.