உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகள்: 3 தங்க பதக்கங்களை வென்று அசத்திய இந்திய அணி

சீனாவில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகள் நடைபெற்று வருகிறதுகாம்பவுண்ட் பிரிவில் இந்திய அணிகள் 3 தங்கப் பதக்கங்களை வென்று அசதியுள்ளனர்
உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகள்: 3 தங்க பதக்கங்களை வென்று அசத்திய இந்திய அணி
Published on

சீனாவில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில், காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணிகள் 3 தங்கப் பதக்கங்களை வென்று அசதியுள்ளனர்.

ஜோதி சுரேகா, அதிதி ஸ்வாமி, பர்ணீத் கௌர் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி இத்தாலியை 236-225 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றனர்.

அபிஷேக் வர்மா, பிரயன்ஷ், பிரதமேஷ் ஆகியோர் அடங்கிய ஆடவர் அணி நெதர்லாந்தினை 238-231 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றனர்.

கலப்பு அணி பிரிவில் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி எஸ்டோனியாவை 158-157 புள்ளிகளில் வென்று தங்கம் வென்றனர்.

நடப்பு ஆசிய விளையாட்டு சாம்பியன் ஜோதி சுரேகாவுக்கு இது இரட்டை தங்கப் பதக்கமாகும். மேலும் தனிநபர் பிரிவில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள அவர் அரையிறுதிப் போட்டியில் தென் கொரியாவை எதிர்கொள்ள இருக்கிறார். .

கலப்பு பிரிவில் தனி நபர் பதக்கத்திற்கான போட்டியில் பிரயன்ஷ் உள்ளார். ரீகர்வ் பதக்க சுற்றுகள் நாளை நடைபெறுகின்றன. இதில் 2 தங்கங்களை இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்க மோதலில் ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரியாவை எதிர்கொள்கிறது. அதே நேரத்தில் தீபிகா குமாரி பெண்கள் ரிகர்வ் பிரிவின் அரையிறுதியில் தென் கொரியாவை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com