புரோ கபடி லீக்: புனேரி பால்டனை வீழ்த்தி வெற்றி பெற்ற யு மும்பா

ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன.முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன.
புரோ கபடி லீக்: புனேரி பால்டனை வீழ்த்தி வெற்றி பெற்ற யு மும்பா
Published on

புனே:

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன. இந்த தொடரில் நேற்று ஓய்வு நாளாகும். இந்நிலையில், இந்த தொடரின் 3வது கட்ட லீக் ஆட்டங்கள் புனேவில் இன்று தொடங்கியது.

இதையடுத்து இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் யு மும்பா - புனேரி பால்டன் அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. இறுதியில் இந்த ஆட்டத்தில் 43-29 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தி யு மும்பா வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com