தேசிய விளையாட்டு வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாடுக்கு 6 பதக்கம்

தேசிய விளையாட்டு வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாடுக்கு 6 பதக்கம்

வாள்வீச்சு போட்டியில் தமிழகத்துக்கு 4 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் கிடைத்தது.பெண்கள் தனிநபர் பாயில் பிரிவில் ஜாய்ஷ் அஷி தா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
Published on

டேராடூன்:

38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. நேற்றுடன் இந்த போட்டி முடிவடைந்தன. தமிழ்நாடு 27 தங்கம், 30 வெள்ளி, 35 வெண்கலம் ஆக மொத்தம் 92 பதக்கம் பெற்று பதக்கப் பட்டியலில் 6- வது இடத்தை பிடித்தது

தேசிய விளையாட்டில் வாள்வீச்சு போட்டியில் தமிழகத்துக்கு 4 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் ஆக மொத்தம் 6 பதக்கம் கிடைத்தது.

பெண்கள் தனிநபர் சேபர் பிரிவில் பவானி தேவி (சென்னை), ஆண்கள் தனிநபர் பாயில் பிரிவில் பிபிஷ், சேபர் பிரிவில் கிஷோநிதி (இருவரும் கன்னியாகுமரி) ஆகியோர் தங்கம் வென்றனர். ஜாய்ஷ் அஷி தா, சுவர்ண பிரபா (சென்னை), ஜெனிஷா (கன்னியாகுமரி), கனக லட்சுமி ( சேலம்) ஆகியோர் அடங்கிய பெண்கள் அணிகள் பாயில் பிரிவில் தங்கம் வென்றது.

பெண்கள் தனிநபர் பாயில் பிரிவில் ஜாய்ஷ் அஷி தா வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜெபர்லின், பெனி குயிபா (கன்னியாகுமரி ) சசிபிரபா (சென்னை) ஆகியோர் அடங்கிய பெண்கள் அணிக்கு சேபர் பிரிவில் வெண்கலம் கிடைத்தது.

வாள்வீச்சு போட்டியில் ஒட்டு மொத்த பிரிவில் தமிழக பெண்கள் அணி 2-வது இடத்தையும், ஆண்கள் அணி 3-வது இடத்தையும் பிடித்தன. பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி தலைவர் தனசேகரன், ஒருங்கிணைப்பாளர் கே.கருணாகரன் ஆகியோர் பாராட்டினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com