2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

நேர்மை, நாணயத்தை கட்டி காப்பாற்றும் எண்ணம் தோன்றும்.
weekly rasipalan
Published on

தனுசு

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும் வாரம்.ராசிக்கு சனி செவ்வாயின் பார்வை உள்ளது. சனிபகவான் வக்கிரகதியில் செல்வதால் தெளிவான மனநிலை யோடு செயலாற்றுவீர்கள். நடக்குமா என்ற காரியத்தை தன்னம்பிக்கை யோடு நடத்தி காட்டுவீர்கள். குடும்பத்தில் நல்ல சூழ்நிலை நிலவும். பலவிதமான வாழ்வியல் மாற்றங்களும் ஏற்றங்களும் உண்டாகும். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் போட்டிகளில், பந்தயங்க ளில் கலந்து கொண்டு பரிசுகளும் பாராட்டுகளும் பெறுவீர்கள். நேர்மை, நாணயத்தை கட்டி காப்பாற்றும் எண்ணம் தோன்றும். எதார்த்தமாக வாழ்வீர்கள் எதற்காகவும் யாருக்காகவும் அலட்ட மாட்டீர்கள்.11.8.2026 அன்று அதிகாலை 4.43 முதல் 13.8.2026 அன்று காலை 6.6 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சுறுசுறுப்பும் செயல் திறனும் குறையும். குடும்பத்தி னரின் சில செய்கைகள் முட்டுக்கட்டையை ஏற்படுத்தும். ஆடி வெள்ளிக்கி ழமை மஞ்சள் லட்டு தானம் வழங்கவும்.

மகரம்

திறமைகள் வெளிப்படும் வாரம். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சனி பகவான் வக்கிரகதியில் பயணிக்கிறார். எனினும் ராசிக்கும் ராசி அதிபதிக்கும் குரு பார்வை இருப்பதால் தொட்டது துலங்கும். உங்கள் திறமைகள் அனைவராலும் போற்றப்படும். வாழ்வின் முன்னேற்றம்,தொழில் தொடர்பான சிந்தனை, சுய முயற்சி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். ஆழ்மன சிந்தனை பெருகும். தொடர்ச்சியான வருமானம் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் நிலவிய சலசலப்பு குறைந்து மகிழ்ச்சி நிலவும்.கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நனவாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். 13.8.2026 அன்று காலை 6.6 முதல் 15.8.2022 அன்று காலை 9.34 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பிரயா ணங்களை தவிர்க்கவும். எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை சாப்பிடவும். ஆடி அமாவாசை அன்று வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு தானம் வழங்கவும்.

கும்பம்

பொருளாதாரத்தில் கவனம் தேவை. ராசி அதிபதி சனி பகவான் வக்ர கதியில் சஞ்சரிக்கிறார். ராசிக்கு ஆறாம் இடத்தில் கடன் நோய் எதிரிகளை சொல்லக்கூடிய ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சூரியன் புதன் குரு ஆகிய மூன்று கிரகங்கள் சேர்க்கை பெற்றுள்ளது. ருண, ரோக சத்ரு ஸ்தானம் வலுப்படுவதால் பொருளாதாரத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும். கடன் பெறுவது கடன் கொடுப்பது ஆகியவற்றில் விழிப்புடன் இருக்க வேண்டும். வக்கீல்கள், சேல்ஸ்மேன்கள் , இலக்கிய பேச்சாளர்கள், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள், ஜோதிடர்கள் போன்றவர்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய விளம்பரம், வளர்ச்சி கிடைக்கும்.ராசியில் ராகுவும் களத்திர ஸ்தானத்தில் கேதுவும் நிற்பதால் சோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. எனவே திருமண விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது.ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு முறையான திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட பலவிதமான இன்னல்களும் அகலும்.

மீனம்

புண்ணிய பலன்கள் நடக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி அதிபதி குரு பகவான் உச்சம் பெற்ற இந்த காலகட்டம் உங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். இது போன்ற கிரக நிலவரம் மீண்டும் 12 ஆண்டுகளுக்கு பிறகு உங்களுக்கு வரும். அக்டோபர் மாத குரு பகவான் இறுதியில் அதிசாரமாக சிம்ம ராசிக்கு சென்று விடுவார். வாழ்க்கையில் நடைபெற வேண்டிய அனைத்து சுப விஷயங்களுக்கும் முயற்சி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.வேலை தொழில் வியாபாரத்தில் போட்டிகளையும், சிக்கல்களையும் சந்தித்தவர்களின் நிலமை சாதகமாக மாறும். உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக முடிவுக்கு வரப் போகிறது.தொழிலுக்கு அரசின் உதவி கிடைக்கும். முயற்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பொருளாதார நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத தன லாபம் உண்டாகும்.வாழ்க்கைத் தரம் உயரும் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். எதையும் சமாளித்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய சொத்துக்கள் சேரும்.குல இஷ்ட தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலம். ஆடி அமாவாசை அன்று புனித நீர் நிலைகளில் நீராடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com