2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

பெற்றோர்கள் குழந்தைகள் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
weekly rasipalan
Published on

தனுசு

புதிய வாய்ப்புகளால் லாபம் உண்டாகும் வாரம். ராசிக்கு செவ்வாய் சனியின் பார்வை உள்ளது. சனிபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டம சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையத் துவங்கும். தொட்டது துலங்கும். தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும். மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். இதுவரை உலகுக்கு தெரியாமல் இருந்து வந்த உங்களுடைய திறமைகள் அனைவருக்கும் தெரியவரும். தங்களின் செயல் திறனில் மாற்றம் ஏற்பட்டு இலகுவாக பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். நிலையான, நிரந்தரமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உங்கள் குழந்தை பிறப்பில் நிலவிய தடைகள் அகலும். நிம்மதியாக உறங்குவீர்கள். இளம் பருவத்தினர் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகள் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். திருமணத் தடை அகலும். சொந்த இன, உறவுகளில் வரன் அமையும். ஆடி வெள்ளிக்கிழமை மஞ்சள் நிற உணவு தானம் வழங்கவும்.

மகரம்

அதிர்ஷ்டம் கூடிவரும் வாரம். ராசிக்கு சூரியன் புதன் குரு, செவ்வாயின் பார்வை உள்ளது. நியாயமாக நேர்மையாக உண்மையாக உழைப்பவர்களுக்கும் சுய ஜாதக ரீதியாக புதன், குரு, சனி, செவ்வாய் தசை நடப்பவர்களுக்கும் செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும். அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் தரக்கூடிய காலகட்டம். வீண், இழப்புகள், விரயங்கள் நஷ்டங்கள் குறையத் துவங்கும். கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் அளவில் லாபங்கள் அதிகரிக்கும். வராக் கடன்கள் வசூலாகும். அடமானத்தில் இருந்த நகை வீடு வந்து சேரும். வீடு மனை தொடர்பான சாதகமான பலன் நடக்கும். விற்காமல் கிடந்த பூர்வீக சொத்துக்களுக்கு நல்ல விலை கிடைக்கும். கடன் தொல்லை குறையும். உங்கள் மேல் தொடரப்பட்ட வழக்குகளுக்காக அபராதம் கட்ட நேரும். பினாமி பெயரில் வாங்கக் கூடிய சொத்துக்கள் பிற்காலத்தில் பயன்படாது. பல நாட்களாக இருந்து வந்த உடல் நல பிரச்னைகள் நீங்குவதோடு, மருத்துவ செலவு வெகுவாக குறையும். தந்தையின் உள்ளுணர்வை புரிந்து கடந்த கால கசப்பான சம்பவங்களை மறக்க முயற்சிப்பீர்கள். ஆடி வெள்ளிக்கிழமை பெண் காவல் தெய்வங்களை வழிபடவும்.

கும்பம்

சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சனிபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். ஆன்மீக பயணங்கள் அதிகமாக மேற்கொள்வீர்கள். வேலையில் பணி நிரந்தரமாகும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும். பூர்வீகம் குலதெய்வம் குழந்தை அதிர்ஷ்டம் காதல் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். மனைவி அல்லது உறவினரின் உயில் சொத்து, பங்குச்சந்தை, லாட்டரி, இன்சூரன்ஸ் ஆகிய வற்றின் மூலம் எதிர்பாராத திடீர் தன வரவு ஏற்பட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பீர்கள். ஆரோக்கிய குறைபாட்டிற்கு மாற்றுமுறை வைத்தியத்தை நாடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை மாறுவதை தவிர்த்தல் நலம். செல்வாக்கை பயன்படுத்தி குறுக்கு வழியில் உங்களை எண்ணங்களை, லட்சியங்களை அடையக்கூடாது. ஆடி வெள்ளிக்கிழமை சாதுக்கள் மற்றும் உடல் ஊனமுள்ளவர்களுக்கு அன்னதானம் செய்தல் நலம்.

மீனம்

உல்லாசமான வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி அதிபதி குரு பகவான் உச்சம் பெற்று சூரியன் மற்றும் புதனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். குரு சூரியன் சேர்க்கை சிவராஜ யோகமாகும். மனம் மிகுந்த உல்லாசமாக இருக்கும். கடந்தகால நெருக்கடிகள் குறையத் துவங்கும். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். உங்களை குழப்பத்தில் ஆழ்த்திய பல விசயங்கள் நல்ல முடிவிற்கு வரும். உங்களின் துன்பங்கள், துயரங்கள் குறைந்து நிம்மதி கிடைக்கும் காலம் வந்துவிட்டது. இதுவரை இருந்து வந்த தடை தாமதங்கள் நீங்கி கிடைத்தற்கரிய பல நற்பலன்கள் உங்களை தேடி வரும். கணவன் மனைவி உறவு பலப்படும். சிலர் திட்டமிட்டு புதிய தொழில் துவங்குவார்கள். அன்றாடம் உழைக்கும் தொழிலாளிகளின் வறுமை, தரித்திரம் விலகும். கடந்த கால இழப்புகளில் இருந்து மீளும் நிலை உண்டாகும். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள்.ஆடி வெள்ளிக்கிழமை அன்று சுமங்கலி பெண்களிடம் நல்லாசி பெறவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com