

ஆளுமைத் தன்மை அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் பகவான் மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தில் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எதிலும் மதி நுட்பத்துடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர் நீச்சல் போட்டு இழந்ததை மீட்பீர்கள். கடன் பிரச்சினைகள் சூரியனைக் கண்ட பனிபோல் படிப்படியாக குறையும். கணவன், மனைவி அந்நியோன்யம் கூடும். தாய், தந்தை வழிச் சொத்து, உயில் ஆதாயம் உண்டு. எதிரிகளின் பலம் குறையும். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோக நற்பலன் தரும். தொழில் மற்றும் சொத்துக்களுக்காக எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். தற்போது சனிபகவான் வக்கிரகதியில் சஞ்சரிக்கிறார். எனவே ஏழரைச் சனியின் தாக்கத்தால் கடந்த சில நாட்களாக கண்ணீர் விட்டு வெளியில் சொல்ல முடியாமல் அனுபவித்த பிரச்சினைக்கு விடிவு காலம் பிறக்கும். தடைபட்ட குல தெய்வ வழிபாடுகள் நிறைவேறும். ஆன்மீகச் சுற்றலாவிற்கு ஏற்ற காலம். ஆடி அமாவாசையன்று பித்ருக்களை வழிபடவும்.
வருமானம் அதிகரிக்கும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். வீடு, நிலம், தோட்டம், வாகன யோகம் உண்டாகும். சிலர் வீட்டை புதுப்பிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். இனிமேல் வராது என்று முடிவு செய்த வராக்கடன் வசூலாகும். குடும்ப பொருளாதார பிரச்சினையை சமாளிக்க நீங்கள் வாங்கிய கடனை சிறுது சிறிதாக அடைக்க முயல்வீர்கள். குடும்ப உறவுகளின் நன்மதிப்பை பெற சற்று அதிகமாகவே செலவு செய்வீர்கள். சிலர் தொழிலில் உபரியாக சம்பாதித்து லாட்டரி அல்லது பங்குச் சந்தையில் கொடுத்து ஏமாறுவார்கள். சில அண்ணன் தம்பிகள் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். ஆழ்மன தியானத்தின் மூலம் ப்ரபஞ்ச சக்தியை உணர்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான நேரம். அயராது உழைத்து வெற்றியும் காண்பீர்கள். ஆடி அமாவாசை அன்று குடும்ப உறுப்பினர்கள் ஒன்றினைந்து பித்ருக்கடன் தீர்த்து முன்னோர்களின் நல்லாசி பெறுவீர்கள்.
எதிர்காலம் பற்றிய தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம். தனம் வாக்கு குடும்பஸ்தானத்தில் சூரியன், குரு, புதன் சேர்க்கை உள்ளது. பணவரவும், ஆதாயமும் அரசாங்க உதவியும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம், திருப்பம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் இந்த மாதத்தில் கிடைக்கக்கூடும். தொழிலில் வருமானம், லாபம் அதிகமாக இருப்பதால் உழைக்கும் ஆர்வம் அரிகரிக்கும். வெளிநாட்டு படிப்பு அல்லது வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வாய்ப்பு கிட்டும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்களுக்கும் வெளிநாடு வாய்ப்பு கிட்டும். குழந்தைகளால் மன மகிழும் சம்பவங்கள் நடக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் மறுமுதலீடாக மாறும். தொழிலில், நிலவிய பிரச்சினைகள் குறையும். சிலருக்கு தொழில் மாற்றும் சிந்தனை அதிகரிக்கும். வீடு, வாகன முயற்சி சாத்தியமாகும். சிலருக்கு எதிர்காலம் பற்றிய வீண் பய உணர்வு மனதை வாட்டும். ஆடி அமாவாசை அன்று துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி தர்ப்பணம் செய்வது நல்லது.
குடும்பத்தில் குதூகலம் உண்டாகும் வாரம்.ராசியில் சூரியன் புதன் குரு சேர்க்கை உள்ளது.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகமாகும்.கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.அதிக வெளியூர் பயணம் செல்ல நேரும். பணிபுரியும் இடத்தில் உள்ள விதிகளை மீறாமல் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். அரசாங்க உத்தியோகம் அல்லது அதற்கு இணையான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம், திருப்பம் உண்டாகும். தீராத பிணிகளும் தீரும். யோகா, மூச்சுப் பயிற்சி, மெடிடேசன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும். நம்பிக்கையிழந்து வாழ்க்கையை ஓட்டியவர்களுக்கு இனி எல்லாமும் சாத்தியம் தான் என்ற நம்பிக்கையை இந்த வாரம் ஏற்படுத்தும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் மன வேதனையில் இருந்தவர்கள் நம்பிக்கை, நாணயத்தை நிலை நிறுத்துவார்கள்.ஆடி வெள்ளிக்கிழமை புனித நீர்களால் அபிஷேகம் செய்து அம்மன் வழிபாடு செய்யவும்.