2026 வார ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும்.
2026 வார ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்
Published on

மேஷம்

விருப்பங்கள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் 3-ம் இடமான வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தன் நம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சியில் தடையில்லாத வெற்றி கிட்டும். அதிர்ஷ்டமும், யோகமும் கூடி வரும். பண வரவு பல வழிகளில் வரும். கோட்சார கிரகங்கள் அனைத்தும் மேஷ ராசியினருக்கு சாதகமாக உள்ளது. சனி பகவான் வக்ர கதியில் செல்வதால் ஏழரை சனியின் தாக்கம் தணிந்து ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.சிலருக்கு பிள்ளைகள் மூலம் வீடு, வாசல் யோகம் உண்டாகும். விலை உயர்ந்த நவீன ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகமும் உள்ளது. ஆடி கிருத்திகை அன்று முருகனை வழிபடவும்.

ரிஷபம்

வேலைப்பளு மிகுதியாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் நீச்சமடைந்து சனி மற்றும் செவ்வாயின் பார்வை பெற்றுள்ளார். வேலை பார்க்கும் இடத்தில் சில சங்கடங்கள் உண்டாகலாம். எதிலும் சிறப்பாக செயல்பட முடியாது. உடன் இருப்பவர்களால் மனக்குழப்பம், பணியில் சோர்வு ஏற்படும். பேச்சால், முன் கோபத்தால் நல்ல வாய்ப்புகள் தள்ளிப்போகும். பேச்சைக் குறைப்பது நல்லது. வேலைப்பளு மிகுதியாகும். மன அமைதி குறையும். வேலை ஆட்களை அனுசரித்துச் செல்லவும். கை, கால், மூட்டு வலியால் சிலருக்கு சிறு அறுவை சிகிச்சைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்து இருக்கும். திருமண தடை விலகி விவாகம் நடைபெறும். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். சங்கடங்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் மாற்றும் வல்லமை இறைபக்திக்கு உண்டு. குல தெய்வ அருள் கிடைக்கும். ஆடி வெள்ளிக்கிழமை அன்று சர்க்கரை பொங்கல் படைத்து அம்மன் வழிபாடு செய்யவும்.

மிதுனம்

பொருளாதாரத் தேவைகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பணபர ஸ்தானம் பலம் பெறுவதால் வர வேண்டிய கடன் வசூலாகும். கொடுக்க வேண்டிய கடனை திரும்ப செலுத்து வீர்கள். சிலருக்கு திடீர் ஜாக்பாட் மூலம் பண வருவாய் அதிகரிக்கும். தடைபட்ட பணவரவு சீராகும். சாதிக்கும் எண்ணம் மேலோங்கும். திருமணத்தடை விலகும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். சிலருக்கு மறுமணத்திற்கும் வரன் கிடைக்கும். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். சொத்து வாங்கும் முயற்சிகள் சித்திக்கும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். திருமண வாய்ப்புகள் தேடி வரும். ஆரோக்கியம் சிறக்கும். பண விசயத்தில் யாரையும் நம்பக் கூடாது. வீடு, வாகனம், பிள்ளைகளின் திருமணம், படிப்பு, நகை வாங்குவது என விரயத்தை சுப செலவாக முதலீடாக மாற்றுவது நல்லது.ஆடி வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி சமேத மகாவிஷ்ணுவை வழிபடவும்.

கடகம்

மனக்கவலைகள் குறையும் வாரம். ராசியில் குரு புதன் சூரியன் சேர்க்கை உள்ளது. இது கடக ராசிக்கு முன்னேற்றம் தரக்கூடிய யோகமான காலமாகும். தொழில் முயற்சிகள் பலிதமாகும். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் பலன் உண்டு. திண்டாட்டம் மாறி கொண்டாட்டம் உலவும். சமுதாய அங்கீகாரத்தை அதிகரிக்கும் நல்ல தொழில் வாய்ப்புகள் தேடி வரும். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வேலையில் புதிய நட்பு வட்டாரம் உருவாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். சொத்தை அடமானம் வைத்து சில்லறைக் கடனை அடைப்பீர்கள். கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் உண்டாகும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் பி.எப். பணம், பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். வாடகை வருமானம் தரக் கூடிய சொத்துக்கள் சேரும். தடைபட்ட வாடகை வருமானம் வரத் தொடங்கும். சொத்துக்களுக்கு நல்ல வாடகை கிடைக்கும். ஆடி வெள்ளிக்கிழமை அன்று புனித நீர்நிலைகளில் நீராடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com