திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் வசந்த உற்சவம் இன்று மாலை தொடங்குகிறது

வேத மந்திரங்களுடன் திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.வசந்த உற்சவம் விழா 31-ந்தேதி நிறைவு பெறுகிறது.
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் வசந்த உற்சவம் இன்று மாலை தொடங்குகிறது
Published on

திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

வைத்திய வீரராகவர் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் இன்று மாலை திருக்குளம் அருகே உள்ள பங்களா தோப்பில் தொடங்குகிறது.

இன்று மாலை 6 மணிக்கு கேடயத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் எழுந்தருளி திருக்குளம் வீதிகள் வழியாக சென்று வசந்த மண்டபத்துக்குள் மேளதா ளம் முழங்க எழுந்தருள்வார்.

அங்கு வேத மந்திரங்களுடன் திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது. அதன் பின்னர் சாமி புறப்பாடு நடக்கிறது. 4 வீதிகள் வழியாக சாமி உலா வந்து கோவிலுக்குள் சென்றடைவார்.

வசந்த உற்சவம் விழா வருகிற 31-ந் தேதி மாலை நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com