எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி திருவிழா

3-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்5, 6, 7 ஆகிய தேதிகளில் தசாவதார சேவை நடைபெறுகிறது.
எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி திருவிழா
Published on

பரமக்குடி பகுதி எமனேசுவரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்திமான பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும். கடந்த 23-ந் தேதி முதல் காப்பு கட்டுடன் திருவிழா தொடங்கியது. தினமும் வரதராஜ பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் 3-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கள்ளழகர் திருக்கோலத்துடன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்குகிறார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு மண்டகப் படிகளுக்கு சென்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 4-ந் தேதி காலை 10 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளி மேலச்சத்திரம் வழியாக பெரிய கடை பஜார் உள்பட முக்கிய பகுதிகளுக்கு சென்று வண்டியூர் சென்றடைவார்.

5, 6, 7 ஆகிய தேதிகளில் வைகை ஆற்றில் தசாவதார சேவை நடைபெறுகிறது. 8-ந் தேதி இரவு வைகை ஆற்றில் இருந்து எழுந்தருளி விதிஉலா வந்து 9-ந் தேதி காலை கோவிலுக்கு சென்றடைவார். இரவு கண்ணாடி சேவை நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், எமனேசுவரம் சவுராஷ்ட்ர சபை நிர்வாகிகளும், கவுன்சிலர்களும் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com