திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா இன்று தொடங்கியது

28-ந்தேதி கருட சேவை நடக்கிறது. மே 2-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா இன்று தொடங்கியது
Published on

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூா் வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் சித்திரை மாத பிரமோற்சவ விழா இன்று காலை 4.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து காலை 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதையொட்டி நாள்தோறும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 3-ம் நாளான 28-ந்தேதி காலை கருட சேவையும். 7-ம் நாளான மே 2-ந் தேதி திருத்தேர் வீதி உலா நடைபெறும்.

தொடர்ந்து பிரமோற்சவத்தின் 9-வது நாளான மே 4-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com