திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் துளசி மஹாத்யம் உற்சவம் 30-ந்தேதி நடக்கிறது

பெருமாளுக்கு துளசி மாலை மிகவும் பிடிக்கும். கோவிந்தராஜசாமி கருட வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் உலா வருகிறார்.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் துளசி மஹாத்யம் உற்சவம் 30-ந்தேதி நடக்கிறது
Published on

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் துளசி மஹாத்யம் உற்சவம் வருகிற 30-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பெருமாளுக்கு துளசி மாலை மிகவும் பிடிக்கும். சிரவண சுத்த துவாதசி அன்று துளசி அவதரித்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக 30-ந்தேதி காலை 7.30 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை கோவிந்தராஜசாமி கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை 9.30 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை ஆஸ்தானம் நடக்கிறது. அதில் வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள் பங்கேற்று துளசி மஹாத்யம் ஓதுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com