திருச்சானூரில் சுந்தரராஜசாமி அவதார மகோற்சவம் 2-வது நாள்: அனுமன் வாகனத்தில் உற்சவர் வீதிஉலா

உற்சவர் சுந்தரராஜசாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.இன்று இரவு கருட வாகனத்தில் சுந்தரராஜசாமி அருள்பாலிக்கிறார்.
திருச்சானூரில் சுந்தரராஜசாமி அவதார மகோற்சவம் 2-வது நாள்: அனுமன் வாகனத்தில் உற்சவர் வீதிஉலா
Published on

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சுந்தரராஜசாமி அவதார மகோற்சவம் நடந்து வருகிறது. உற்சவத்தின் 2-வது நாளான ேநற்று மதியம் ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் சுந்தரராஜசாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவருக்கு ஊஞ்சல் சேவை நடந்தது.

இரவு உற்சவர் சுந்தரராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவத்தின் 3-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கருட வாகனத்தில் சுந்தரராஜசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத்துடன் சுந்தரராஜசாமி அவதார மகோற்சவம் நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com