திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் கவசம் நாளை திறப்பு

நாளை மகா அபிஷேகம் மற்றும் புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெறும்.வருகிற 9-ந்தேதி வரை 3 நாட்கள் ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும்.
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் கவசம் நாளை திறப்பு
Published on

திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு ஆண்டு முழுவதும் மூல வர் ஆதிபுரீஸ்வரர் தங்க நாக கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆண்டுக்கு ஒரு முறை கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளன்று ஆதிபுரீஸ்வரர் மீது சாத்தப்பட்டிருக்கும் தங்க நாககவசம் திறக்கப்பட்டு 3 நாட்களுக்கு மட்டும் கவசமின்றி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

இந்த ஆண்டு கார்த்திகை பவுர்ணமி தினத்தையொட்டி நாளை (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு ஆதிபுரீஸ்வரர் மீது சாத்தப்பட்டுள்ள கவசம் திறக்கப்பட்டு மகா அபிஷேகம் மற்றும் புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெறும். வருகிற 9-ந்தேதி இரவு 8 மணிவரை 3 நாட்கள் ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும்.

ஆண்டுக்கொரு முறை 3 நாட்களில் மட்டும் ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும் என்பதால் இந்த அதிசய நிகழ்வை காண தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com