திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

வெளி மாநிலங்களிலில் இருந்து திரளான பக்தர்கள் திரண்டனர்.கோவில் அருகே உள்ள நள தீர்த்த குளத்தில் பக்தர்கள் புனித நீராடினர்.
நளன் குளத்தை ஒட்டியுள்ள தேங்காய் உடைக்கும் இடத்தில் பக்தர்கள் கூட்டம்
நளன் குளத்தை ஒட்டியுள்ள தேங்காய் உடைக்கும் இடத்தில் பக்தர்கள் கூட்டம்
Published on

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்திபெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், கோடைவிடுமுறை முடிந்து வருகிற 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது். இதையொட்டியும் நேற்று சனிக்கிழமை என்பதாலும் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் பக்தர்கள் குவிந்தனர்.

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை 4.30 மணி முதல், புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, காஞ்சீபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலில் இருந்தும் திரளான பக்தர்கள் திரண்டனர். கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர்.

முன்னதாக, கோவில் அருகே உள்ள நள தீர்த்த குளத்தில் பக்தர்கள் புனித நீராடினர். கோடை வெயில் தாக்கிவருவதால் பக்தர்கள், வெயிலை சமாளிக்க, நளன் குளத்தில் நீண்ட நேரம் புனித நீராடினர். அங்கு வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்பின் சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com