பிரம்மோற்சவ விழா கோலாகலம்: தங்க காக வாகனத்தில் சனீஸ்வரர் வீதி உலா

சனீஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.டிசம்பர் 20-ந்தேதி 2½ ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற உள்ளது.
தங்க காக வாகனத்தி்ல் சிறப்பு அலங்காரத்தில் சனீஸ்வரர் எழுந்தருளிய காட்சி.
தங்க காக வாகனத்தி்ல் சிறப்பு அலங்காரத்தில் சனீஸ்வரர் எழுந்தருளிய காட்சி.
Published on

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனி பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் கடந்த 3-ந்தேதி நடந்தது.

இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதி உலா வந்தார். முன்னதாக சனீஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று இரவு தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில் வருகிற டிசம்பர் 20-ந்தேதி 2½ ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com