திருமழிசை ஜெகநாத பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது

வருகிற 9-ந்தேதி கருட சேவை நடக்கிறது.13-ந்தேதி தேர்த்திருவிழாவும் நடைபெற உள்ளது.15-ந்தேதி கொடியிறக்கத்துடன் ஆனி பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெறுகிறது.
திருமழிசை ஜெகநாத பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது
Published on

திருவள்ளூர் :

திருமழிசையில் உள்ள ஜெகந்நாத பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆனிப் பிரம்மோற்சவ திருவிழா இன்று காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து மாலை சுவாமி தங்க தோளுக்கினியன் வாகனத்தில் திருவீதி புறப்பாடும் நடைபெறும்.

விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடை பெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை வருகிற 9-ந்தேதி காலையிலும், 13-ந்தேதி தேர்த்திருவிழாவும் நடைபெற உள்ளது. வருகிற 15-ந்தேதி மாலை கொடியிறக்கத்துடன் ஆனி பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com