மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி பெருவிழா நாளை தொடங்குகிறது

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் 16-ந்தேதி அறுபத்து மூவர் விழா நடக்கிறது. இதில் வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு காட்சி தருகிறார்.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
Published on

சென்னை:

சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர் கோவிலில் பங்குனி பெருவிழா நாளை (9-ந்தேதி) தொடங்கி 18-ந்தேதி வரை நடைபெறுகிறது.

நாளை (9-ந்தேதி) காலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. 10-ந்தேதி காலையில் வெள்ளி சூரிய வட்டம் நிகழ்ச்சியும், இரவு வெள்ளி சந்திர வட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ந் தேதி காலையில் அதிகார நந்தி காட்சி நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந்தேதி இரவு வெள்ளி ரி‌ஷப வாகன காட்சி நிகழ்ச்சி நடக்கிறது.

வருகிற 15-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு இறைவன் திருத்தேருக்கு எழுந்தருள்கிறார். காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் படித்து இழுக்கிறார்கள்.

16-ந்தேதி மதியம் 3 மணிக்கு அறுபத்து மூவர் விழா நடக்கிறது. இதில் வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு காட்சி தருகிறார். 17-ந்தேதி காலையில் ஐந்திருமேனிகள் விழாவும், மாலையில் இறைவன் இரவலர் கோல விழாவும் நடக்கிறது.

18-ந்தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.

மேலும் விழா நடைபெறும் நாட்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com