தை அமாவாசை: மேல்மலையனூரில் ஊஞ்சல் உற்சவம்- லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

அம்மன் தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். அடுத்த மாதம் மயானக்கொள்ளை நடைபெற இருப்பதால் ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.
தை அமாவாசை: மேல்மலையனூரில் ஊஞ்சல் உற்சவம்- லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

மேல்மலையனூர்:

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.

இதை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தா னத்தில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி குங்குமம், இளநீர் பஞ்சாமிர்தம்,தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.

தொடர்ந்து தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு ராஜராஜேஸ்வரி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.

அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி அங்காளம்மா, ஓம் சக்தி அங்காளம்மா, என கோஷத்துடன அம்மனை வழிபட்டனர். இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து உற்சவர் அம்மன் கோவிலின் உட்பிரகாரத்துக்குச் சென்றார். ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அடுத்த மாதம் அமாவாசை அன்று மயானக் கொள்ளை விழா நடைபெறுவதாலும் அன்று இரவு அம்மன் ஆண் பூத வாகனத்தில் வீதி உலா வருவதாலும் அன்று இரவு ஊஞ்சல் விழா நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com