புனித தோமையார் ஆலய ஆண்டு திருவிழா

கடந்த 9 வாரங்களாக பிரதி ஞாயிறு தோறும், சிறப்பு நவநாள் திருப்பலி நடத்தப்பட்டது.புனித தோமையார் சுரூபம், தேவாலய வளாகத்தை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது.
புனித தோமையார் ஆலய ஆண்டு திருவிழா
Published on

அவினாசி – சேவூர் சாலையில் உள்ள புனித தோமையார் கத்தோலிக்க தேவாலயத்தில் ஆண்டு திருவிழா நேற்றுமாலை நடந்தது. முன்னதாக கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் ஆண்டுத்திருவிழா தொடங்கியது. நேற்று திருவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் காலை 8.30 மணிக்கு கோவை நல்லாயன் குருத்துவ கல்லுாரி பேராசிரியர் லாரன்ஸ் தலைமையில் தேவாலய பங்கு குரு கென்னடி முன்னிலையில் ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி நடத்தப்பட்டது.

திருப்பலி முடிவில், திவ்ய நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. பின் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், பாண்டு வாத்தியம் முழங்க, புனித தோமையார் சுரூபம், தேவாலய வளாகத்தை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது.

முன்னதாக கடந்த 9 வாரங்களாக பிரதி ஞாயிறு தோறும், சிறப்பு நவநாள் திருப்பலி நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை பங்கு குரு, பங்கு பேரவையினர், அன்பிய பொறுப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com