அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் இன்று உறுதி பூசுதல் விழா

தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்குகிறார்.இரவு 8.30 மணிக்கு தேரடி நற்கருணை ஆசீர் நடக்கிறது.
அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் இன்று உறுதி பூசுதல் விழா
Published on

புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 10-ம் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பெருவிழா மற்றும் உறுதிபூசுதல் விழா, கூட்டு திருப்பலி நடக்கிறது.

இதற்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்குகிறார். மதியம் 2 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 8.30 மணிக்கு தேரடி நற்கருணை ஆசீர் நடக்கிறது.

திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை செல்வராயர், உதவி பங்குதந்தை வில்லியம், பங்கு மேய்ப்பு பணிகுழு துணைத்தலைவர் வி.ஏ.எம்.ராஜன், செயலாளர் டி.டி.செல்லத்துரை, துணை செயலாளர் ஜார்ஜ் மலர்கொடி, பொருளாளர் மரியஜார்ஜ் மற்றும் பங்கு மேய்ப்பு பணிகுழு நிர்வாகிகள், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com