கருங்கண்ணி புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
கருங்கண்ணி புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி
Published on

நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த கருங்கண்ணியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டுப்பெருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று இரவு நடந்தது. முன்னதாக தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

இதை தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல் சம்மனசு, சவேரியார், அருளானந்தர், சூசையப்பர், மாதா, அந்தோணியார் சொரூபங்கள் வைக்கப்பட்டது. ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com