சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் தூய்மை பணி 22-ந்தேதி நடக்கிறது

24-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை சாத்காத்கார வைபவ உற்சவம் நடக்கிறது.அனைத்துச் சன்னதிகளும் தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகிறது.
சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் தூய்மை பணி 22-ந்தேதி நடக்கிறது
Published on

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருகிற 24-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை வருடாந்திர சாத்காத்கார வைபவ உற்சவம் நடக்கிறது. அதையொட்டி 22-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

அன்று அதிகாலை கோவிலில் மூலவர்களுக்கு பூஜைகள் முடிந்ததும் மூலவர் சன்னதியில் இருந்து நுழைவு வாயில் வரை அனைத்துச் சன்னதிகளும் தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகிறது.

அதன் பிறகு மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com