உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி

உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடந்தது.
சந்திரசேகர் சவுந்தரவள்ளி சாமிகள்  சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.
சந்திரசேகர் சவுந்தரவள்ளி சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.
Published on

ஆட்டையாம்பட்டி:

சேலம் அருகே கொண்டலாம்பட்டியை அடுத்துள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் திருவிழா இன்றுமஞ்சள் நீராட்டு விழாவுடன் நிறைவுபெற்றது.

முன்னதாக நேற்று நடைபெற்ற ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியில் சந்திரசேகரர் சவுந்தரவள்ளி சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் பூலாவரி, உத்தமசோழபுரம், நெய்க்காரப்பட்டி உள்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

சித்ரா பவுர்ணமி தேரோட்டம் நடந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் கோவில் கட்டளைதாரர்கள் மற்றும் விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் அர்ச்சகர்கள் அலங்காரம் மற்றும் அபிஷேக பூஜைகள் செய்தனர். 

திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சங்கர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். தினந்தோறும் கரபுரநாதர் கோவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்த வண்ணமாக இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com