உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் முகூர்த்தகால் நடப்பட்டது

உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமி தேர் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தகால் நடப்பட்டது.
முகூர்த்தக்கால் நடப்பட்ட காட்சி.
முகூர்த்தக்கால் நடப்பட்ட காட்சி.
Published on

ஆட்டையாம்பட்டி:

சேலம்  கொண்டலாம்பட்டி  அருகே பழமை  வாய்ந்த உத்தமசோழபுரம்  கரபுரநாதர் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கொரோனா கட்டுப்பாட்டின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி நாளில் தேரோட்டம் நடைபெறவில்லை.

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் வருகிற 16-ம் தேதி (சித்திரை மாதம் 1-ந்தேதி) சனிக்கிழமை  சித்ரா பவுர்ணமி தேரோட்டம் நடைபெற உள்ளது.  இதையொட்டி கோவில் வளாகத்தில் இன்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதில் வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மலர்விழி ராஜா  கோவில் அர்ச்சகர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். வருகிற 13-ம் தேதி கணபதி ஹோமம், 14-ம் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றம், 15-ம் தேதி திருக்கல்யாணம், சித்ரா பவுர்ணமி நாளான 16-ம் தேதி தேரோட்டம், 17-ம் தேதி சத்தாபரணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 18-ம் தேதி (திங்கட்கிழமை) திருவிழா நிறைவு பெறுகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com