ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்த வடமாநில பக்தர்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 3 நாட்கள் தடையை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வடமாநில பக்தர்கள் நேற்று குவிந்தனர்.
ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள்.
ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள்.
Published on

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரத்தில் வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. 3 நாள் தடை முடிந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் நேற்று முதல் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக் கப்பட்டனர்.

கொரோனா பரவல் காரணமாக ராமேசுவரம் கோவிலில் 3 நாட்களுக்கு பிறகு கோவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று வடமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். தமிழகத்தை சேர்ந்த பக்தர்களின் எண்ணிக்கை மிகமிக குறைவாகவே காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com