பங்குனி திருவிழா: திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இடதுபாத தரிசனம்- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தலைமை பீடமாகவும் பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.நீண்ட வரிசையில் நின்று பாத தரிசனம் செய்து வருகின்றனர்.
பங்குனி திருவிழா: திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இடதுபாத தரிசனம்- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Published on

திருவாரூர்:

திருவாரூர் தியாகராஜர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த மாதம் 15 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் ஆழி தேரோட்டம் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது.

இந்தநிலையில் பங்குனித் திருவிழாவின் அடுத்த முக்கிய நிகழ்வான தியாகராஜர் இடதுபாத தரிசனம் அருளும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று பாத தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனை, மகாஅபிசேகம், நடராஜன் அபிசேகம் ஆகியவை நடைபெற்றது. பாத தரிசனத்தை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்: கருண் கரட் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com