முருகன் கோவில்களில் தை மாத கிருத்திகை வழிபாடு

பரமத்தி வேலூர் பகுதி முருகன் கோவில்களில் தை மாத கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி,தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர்.
சிறப்பு அலங்காரத்தில் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி,தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம்பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்திலுள்ள பாலமுருகன், நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகே மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர் ,மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

அதேபோல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில் உள்ளிட்ட கோயில்களில்  முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com