கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் தர்காவில் வெள்ளை முகூர்த்தம்

கந்தூரி விழா டிசம்பர் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தர்கா சின்ன ஆண்டவர் வாசல் முன்பு தர்கா கலிபா சிறப்பு துவா ஓதினார்.
கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் தர்காவில் வெள்ளை முகூர்த்தம்
Published on

நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தூரி விழா அடுத்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதைமுன்னிட்டு வெள்ளை முகூர்த்தம் பணி தொடங்கியது. முன்னதாக தர்கா சின்ன ஆண்டவர் வாசல் முன்பு தர்கா கலிபா சிறப்பு துவா ஓதினார். இதில் திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி மற்றும் போர்டு ஆப் டிரஸ்டிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com