கழுகு மலைமுத்து மாரியம்மன் கோவில் கொடைவிழா தொடக்கம்

28-ந்தேதி இரவு 12 மணிக்கு நள்ளிரவு பூஜை நடைபெறும்.29-ந்தேதி முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.
கழுகு மலைமுத்து மாரியம்மன் கோவில் கொடைவிழா தொடக்கம்
Published on

கழுகுமலை மருத்துவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன், சப்பாணி மாடசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து விநாயகர், சப்பாணி மாடசாமி, கருப்பசாமி, பேச்சியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு கோவில் வளாகத்தில் கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெறும். வருகிற 27-ந் தேதி மாலை 6 மணியளவில் பெண்கள் பங்கேற்கும் 501 திருவிளக்கு பூஜை நடக்கிறது.

28-ந்தேதி மதியம் 12 மணியளவில் உச்சிகால பூஜையும், இரவு 12 மணிக்கு நள்ளிரவு பூஜையும் நடைபெறும். 29-ந்தேதி காலை 10 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. மதியம் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மாலை 6 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் மற்றும் அக்கினி சட்டி எடுத்து ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com